சாதி, மதம், இனம், மொழி, பிரதேச வேற்றுமைகளையெல்லாம் கடந்து மனிதர்களிடையே அன்பு கொண்டு வாழ்வது உயர்வானது என்பதில் சந்தேகமில்லை. ஏதாவது ஒரு சில காரணங்களால் ஒன்றுகூடி சமூகமாக வாழும் பண்பு கொண்டவர்களாக ஆனால் உலகம் முழுதுள்ள மனிதர்கள் இனம், மொழி, மதம், கலாச்சாரம், வாழிடச் சூழ்நிலை, ஒரே கருத்து, போன்றவற்றால் ஒன்றினைக்கப்படுகிறார்கள். இவ்வாறு இவற்றில் ஒரு பொருளின் மீதோ ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்களினாலோ ஒன்றினைந்த மக்கள் கூட்டங்கள் ஒரு சமுதாயமாக, தேசிய இனங்களாக உலக அரங்கில் உருவாகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களுக்கென்று சுதந்திரமான அரசை அமைத்துக் கொள்ளும்போது ஒரு இறைமைபெற்ற நாடாக அறியப்படுகிறார்கள். இவ்வாறு பல தேசிய இனங்கள் ஒன்றிணைந்தால் அது கூட்டாட்சி நாடு எனப்படுகிறது.
கூட்டாட்சி நாடுகளின் அடிப்படை இயல்பே ஒருசில ஒற்றுமைக் காரனிகளால் இணையப்பெற்ற நாட்டில் மாறுபட்ட விருப்பங்கள் கொண்ட பல தேசிய இனங்கள் இருப்பதுதான். நங்கு சிந்தித்து பார்த்தால் பல தேசிய இனங்களைக் கொண்ட ஒரு கூட்டாட்சி நாட்டில், அவற்றில் எந்தவொரு தேசிய இனத்தின் விருப்பங்களுக்கு எதிராகவும் பிறிதொரு தேசிய இனமோ அல்லது கூட்டாட்சி நாடோ கன்டிப்பாக செயல்பட முடியாது. அப்படிச் செயல்பட்டால் அவையிரண்டும் ஒன்றாக இருக்க முடியாது. இருந்தால் அவற்றில் ஏதோவொன்று பிற தேசிய இனத்திற்கு அல்லது ஒட்டுமொத்த கூட்டாட்சி நாட்டிற்கு அடிமைப்பட்டதாக அர்த்தமாகிவிடும். எனவேதான் கூட்டாட்சி நாடானது தன்னுள் அடங்கிய ஒவ்வொரு தேசிய இனங்களின் விருப்பங்களையும் முழுவதும் மதித்து நடக்க வேண்டும் என்பது அவசிய நிபந்தனையாகிறது.
இந்த கட்டாயத்திற்கு எதிராக தமிழக மக்களின் உணர்வுகளுக்கும், விருப்பங்களுக்கும், நலனுக்கும் எதிராக இந்திய அரசு ஈழ விவகாரத்திலும், தமிழக மீனவர்கள் இலங்கை அரசால் தாக்கப்படும் விவகாரத்திலும் வந்திருக்கிறது, வருகிறது. தமிழக மக்களின் உணர்வுகள் மதிக்கப்படாமல் இருப்பதுமட்டுமில்லாமல் எதிராகவும் இந்திய அரசு முடிவுகள் மேற்கொண்டு வருகிறது. அதற்கு பல்வேறு பொறுத்தமற்ற அயலுறவுக் காரணங்களை சொல்லி வருகிறது. பல நேரங்களில் எவ்வித காரணங்களையும் தமிழக மக்கள் மத்தியில் பேசாமல் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கிறது.
இனம், மொழி மற்றும் ஒத்த பழக்க வழக்கங்களைக் கொண்ட ஈழத் தமிழ்மக்கள் மீது தமிழக மக்கள் பரிவு கொண்டிருப்பது இயற்கையானது. அதை யாரும் தவறென்று கூறிவிட முடியாது. ஏனெனில் இப்படியாக ஒற்றுமையுணர்வு கொண்டு வாழ்வது மனிதர்களின் பொது இயல்பு என்று நாம் ஏற்கனவே பார்த்தோம். அம்மக்கள் இன, மத, மொழி கலாச்சார வேறுபாடு கொண்ட சிங்களப்பேரினவாத அரசால் சமஉரிமை மறுக்கப்பட்டு கொன்றொழிக்கப்படும்போது அதைத் தடுக்க வேண்டும் என்கிற உணர்வு தமிழக மக்களுக்கு இயல்பாக வரும்போது அதை புறக்கணித்து கண்டுகொள்ளாமல் அதற்கு எதிராகவே மத்திய அரசு செயல்படுவது கூட்டாட்சி நாட்டின் அடிப்படையையே பாதிக்கிறது.
கூட்டாட்சி நாட்டில் இறையாண்மை என்பது அதன் உறுப்பு நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் தங்கள் இறைமையை உணர்வதில்தான் அடங்கியிருக்கிறது. அவ்வாறு தனித்தனியாக உள்ள இறைமையை மதிக்கும் அதே நேரத்தில்தான் மத்திய கூட்டாட்சி நாட்டின் இறைமையும் பாதுகாக்கப்படுகிறது. இதில் எவையிரண்டும் முரண்பட்டு நிற்க முடியாது. அதை உறுப்பு நாடுகளும் ஒன்றிணைந்த கூட்டாட்சி நாடும் மதித்து நடக்க வேண்டும். இவ்வளவு பொறுப்பு வாய்ந்த கூட்டாட்சி நாட்டின் அரசாங்கத்தை நடத்த வந்தவர்கள் நாட்டின் ஒற்றுமையை மனதில் வைத்து பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். தங்கள் மாநிலம் சார்ந்த விருப்பத்தின் அடிப்படையலோ, சுய குடும்ப நலத்தினாலோ, மத்திய கூட்டாட்சி அரசின் அதிகாரப் போதையிலோ ஆள்கிறவர்கள் நடந்துகொள்வதால் உருவாகின்றன. தகுந்த அதிகாரம் வழங்கப்படாத கூட்டாட்சி நாடுகளில் எல்லாம் இன்று உள்நாட்டுப்போர் நடந்துகொட்ண்டு வருகிறது. இலங்கையும் அதில் ஒன்று. மத்திய அரசை ஆளவந்த காங்கிரஸ் கட்சி இத்தத்துவங்களையெல்லாம் மறந்து பல்வேறு வகைகளில் நாட்டின் ஒற்றுமையை சீர்குலைத்து வருகிறது.
இது ஒருபுறமிருக்க நூற்றுக்கணக்கில் தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இக்கொடுமை தொடர்ந்து நடந்து வருகிறது. மத்திய அரசு எந்தக் கடுமையான நடவடிக்கைகளையும் எடுப்பதில்லை. ஏற்கனவே கச்சத்தீவை அநியாயமாக தாரைவார்த்து தமிழர்களின் வயிற்றிலடித்துள்ளது இந்திய அரசு. அதன் விளைவுகளை இன்று வரை தமிழக மீனவர்கள் சந்தித்து வருகிறார்கள். இவ்வாறு செய்த பின்னரும் தங்கள் தவறை உணராமல் கிள்ளிய பின்பு குழந்தை ஏன் அழுகிறது? அது தவறு. என்று வாதிடுவது கள்ளத்தனம்! அடக்குமுறை! தங்கள் தவறை மறைத்து விட்டு தமிழக சீமான்களை திட்டுவது ஏன்? சிறைக்குள் தள்ளுவது ஏன்?